Saturday, August 6, 2011

SMS





A boy was taking rest on his lover shoulder
He asked how long can i rest on your shoulder
she replied,
Till four people take me on their shoulder..

nice one..



போதை







தன்னிலை  இழந்து 
செயலை துறந்து 
உலகம் மறந்து 
இருப்பது போதை என்றால் 
மழலை சிரிப்பும் 
போதை தான் ...



Saturday, October 16, 2010

எதிரி




மூன்று வருடமாய் உன் கன்னத்தில்
பாடம் படித்து கொண்டிருக்கும்  என்
முதல் எதிரி
உன் முகப்பரு ......

Saturday, June 19, 2010

வீதி




வீதி வீதியாக அலைந்தாலும்

அவள் வரும் போது மட்டும்
கடை வீதி
வான் வீதி யாக மாறி  விடுகிறது .....

Friday, April 2, 2010

மின்மினி பூச்சிகள்







முன் இரவில்
வழியில் நின்று
வலை இல்லாமல்
தானே மாட்டி
பின்னிரவு முழுவதும்
வெளிச்சத்தை கொடுத்து 

காலையில் கருகிவிடும்
மின்மினி பூச்சிகள்.........
                                                   What Are You Afraid Of

Tuesday, March 2, 2010

மடிக்கணினி -1



மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பது பழமொழி , ஆனால் தற்பொழுதோ மடியில் கணம் இருந்தால் வழியில் பயமில்லை என்பது புதுமொழி . ஆம் அப்படி பலரது மடியில் தவழ்ந்து கன நேரம் கூட பிரியாமல் நம்மில் ஓர் அங்கம் ஆகிவிட்ட மடிக்கணிணியை பற்றி தான் பார்க்கப் போகிறோம் .

கணிணி இல்லாத அலுவலகமே இல்லை என்ற நிலையை அடுத்து கணிணி இல்லாத வீடு என்பதை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம் . தொலைகட்சியின் இடத்தை எட்டி விடும் தூரத்தில் தான் கணிணியின் வளர்ச்சி இருக்கிறது . இந்த குறுகிய காலத்தில் கணிணியின் வளர்சிக்கு பெரிதும் உதவி இருப்பது மடிக்கணிணி வகையாகும் . மடிக்கணிணி வந்த பிறகு தான் கணிணியின் விலை குறைந்து நடுத்தர மக்கள் வாங்கும் நிலை வந்தது .
ஏற்கனவே கணிணி அசெம்பிள் செய்வதை பற்றி நாம் பார்த்து விட்டதால் மடிக்கணிணி வாங்குவது பற்றியும் அதை பராமரிப்பது பற்றியும் பார்க்கலாம் .


மடிக்கணிணி பல்வேறு வகைகளில் கிடைத்தாலும் நம் பயன்பாட்டிற்கு ஏற்ப வாங்க வேண்டும் . பொதுவாக என்ன விசயங்களில் நாம் கவனம் கொள்ள வேண்டும் எனில் மடிக்கணிணியுடன் வரும் வெப் கேமரா , விரல் ரேகை மூலம் லாக் செய்வது , பாட்டரி, எடை , திரை அளவு ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும் . இதில் எது தேவை என்பதை கரத்தில் கொண்டு வாங்க வேண்டும் . பொதுவாக மடிக்கணிணி எடை குறைந்த அளவில் வாங்க வேண்டும். திரை அளவு ஆகவே திட்டமிட்டு தொடரும் எடை அளவும் கூடும். 6 செல்ஸ் மற்றும் 9 செல்ஸ் பேட்டரி இருந்தாலும் 9 செல்ஸ் பேட்டரி கொண்டு அதிக நேரம் வேலை செய்யலாம் ஆனால் அதை நிறுவும்போது மடிக்கணிணியின் எடை கூடவும் செய்யும் .

அதிகப்படியான வசதிகள் அதிக விலை உள்ளவையாகவும் அடிக்கடி உபயோகப் படுத்த முடியாமலும் இருக்கும் .

Tuesday, February 2, 2010

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - பனிரெண்டாம் வகுப்பு

சரி நீங்கள் விண்டோஸ் reinstall செய்கிறீர்கள் எனில் அப்போது மீண்டும் OS activate செய்ய வேண்டுமா எனில் தேவை இல்லை . உங்கள் கணிணியில் உள்ள குறிப்பிட்ட file மட்டும் போதும் அதில் ஏற்கனவே உங்கள் கணிணியை பற்றி குறிக்க பட்டு இருக்கும் .
மேற்கண்ட file ஐ கோப்பி செய்து விட்டு reinstallation முடித்த உடன் மீண்டும் அதே இடத்தில் பேஸ்ட் செய்யும் போது நமது கணிணி activate செய்ய பட்டு விடும் .

கணினியை நீங்கள் விண்டோஸ் bootable cd மூலம் பூட் செய்து ரிப்பேர் option தேர்ந்தெடுத்து செய்யும் போது இதை செய்ய தேவை இல்லை . அதே போல் நீங்கள் ரிப்பேர் செய்யும் போது கணிணியில் உங்கள் C டிரைவ் இல் உள்ள file கள் எந்த பாதிப்பும் அடையாது .


விண்டோஸ் OS இன்ஸ்டால் முடிந்த உடன் ஆட்டோமாடிக் அப்டேட்ஸ் enable செய்து கொள்ள வேண்டும் . இதன் மூலம் நம் இனத்தில் இருக்கும் நேரத்தில் கணினியானது அதுவே அப்டேட்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளும். பின்னர் நமக்கு தேவையான இப்போது மொதேர்போர்ட் சத் இல் . உள்ள இப்போது இல்லாதவர்கள் அப்டேட் செய்வதற்கு விண்டோஸ் XP SP3 அப்டேட்ஸ் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

SERVICES.MSC மூலம் இதை நாம் enable செய்யவோ disable செய்யவோ முடியும் .
அப்டேட்ஸ் என்பது விண்டோஸ் இல் ஏற்படும் பிழைகளை நீக்குவதற்கும் , upgrade செய்வதற்கும் ,புதிய மாற்றங்களை உட்புகவும் பயன்படுதபடுவதாகும் .
இவை patches ஆகவோ சர்வீஸ் package ஆகவோ வெளிவரும் .

இப்போது மதர்போர்ட் cd இல் இருந்து டிரைவர் களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் . முதலாவதாக சிப்செட் இன்ஸ்டால் செய்யவும் . பின் வரிசையாக VGA, ஆடியோ , நெட்வொர்க் டிரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் .
இதை தவிர ஏதேனும் ஹாட்பிக்ஸ் கள் கொடுக்கப் பட்டிருந்தால் அதனையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . முடிந்தால் டிரைவர்களை இன்னொரு cd இல் backup எடுத்து கொள்ள வேண்டும் . அல்லது நமது கணிணியின் மற்றொரு partition இல் காப்பி செய்து கொள்ள வேண்டும் . டிரைவர் கள் அனைத்தும் இன்ஸ்டால் செய்து முடித்த வுடன் கணிணியை restart செய்வது அவசியம் .

device மேனேஜர் க்கு சென்று கணிணியில் இன்ஸ்டால் செய்துள்ள டிரைவர்கள் பற்றியும் அதன் பதிப்பு குறித்தும் அறிந்து கொள்ளலாம் .

மேற்கண்ட படத்தில் device மேனேஜர் அக்செஸ் செய்வது கன்ட்ரோல் பனேல் வழியாக செல்லுமாறு உள்ளது . இது தவிர மை கம்ப்யூட்டர் ஐ ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்தீஸ் டேப் செலக்ட் செய்தால் அது சிஸ்டம் ப்ரோபெர்தீஸ் மெனு வை ஓபன் செய்யும் .
இதன் மூலமாகவும் device மேனேஜர் ஐ ஓபன் செய்யலாம் .

இதுவரை கணிணி அசெம்பிள் செய்வதை பற்றி எளிய நடையில் தந்துள்ளேன் . என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் . விரைவில் மடிகணினி பற்றிய பதிவுகளுடன் சந்திக்கிறேன் . அதுவரை சூப்பர் கம்ப்யூட்டர் இன் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துகிட்டு இருங்க .....