Monday, January 11, 2010

கணிணி - நாமே அசெம்பிள் செய்வது எப்படி - நான்காம் வகுப்பு


மதர் போர்டு வாங்கும் போதே அதற்கு ஏற்ற ப்ரோசெசரை நாம் தேர்ந்தெடுத்து விட வேண்டும் . ப்ரோசெசர்கள் படி படியாக முன்னேற்றம் அடைந்து தற்போது core 2 quad என்ற அளவில் புழக்கத்தில் உள்ளன . ப்ரோசெசர்களில் ஒரு சிலவற்றை மட்டும் தற்போது தெரிந்து கொண்டால் போதும்.

பெண்டியம் 4 - வழக்கத்தில் இல்லை (வேண்டுமானால் விண்டோஸ் 98,2000 இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் )

dual core - ஒரு சில இடங்களில் மட்டும் (விலை குறைவாக செல்பவர்களுக்கு ) ஒபெரடிங் சிஸ்டம் xp க்கு போதுமானது

core 2 duo - பொதுவாக வாங்கப்படுவது (காமன் மேன்கள் வாங்குவது ஹிஹிஹி ) ஒபெரடிங் சிஸ்டம் விண்டோஸ் 7 க்கு தேவை

core 2 quad - சற்றே விலை கூடுதலானது .. high end என சொல்லலாம் விண்டோஸ் 7 மற்றும் சர்வர் களில் பயன்படும் .

Xeon - ப்ரோசெசர் கள் சர்வர் களில் பயன்படும்

mobile - ப்ரோசெசர் கள் லேப்டாப் களில் காணப்படும் ..

இதை தவிர AMD ப்ரோசெசர் களும் உபயோகப் படுத்தப் படுகின்றன .



கணிணி பாகத்தில் வெகு எளிதாக வெப்பமடையக் கூடிய பொருளாகும் . ஆகவே தான் இதன் மேலே heat sink and cooler fan பொருத்துகிறோம் .


2MB, 3MB cache எது வேணும் உங்களுக்கு கேட்டா குழம்பாதீங்க ... அது ப்ரோசெசர் மெமரி தான் . மெயின் மெமரி (ராம்) அதிகமாக பயன் படுத்தும் டேட்டா வை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளும் திறன் தான் L1 மெமரி எனப் படுகிறது.

L2 மெமரி என்பது மதர் போர்டு இல் சால்டர் செய்யப்பட்டு , அல்லது ஸ்லாட் -இல் வரக் கூடியாது .


நாம் வாங்கி அசெம்பிள் செய்யப் போகும் ப்ரோசெசர் இன்டெல் core 2 duo E7500 / 2.93 GHz இதன் விலை - 5,650 rs

அடுத்த வகுப்பில் நாம் பார்க்கப் போவது மெமரி (ராம்)...

6 comments:

♠புதுவை சிவா♠ said...

Good post மகா

thx

சுடுதண்ணி said...

அசத்துறீங்க... தொடர்ந்து எழுதுங்க :)

மகா said...

வருகைக்கு நன்றி புதுவை சிவா....

மகா said...

உங்கள் பாராட்டுக்கள் மேலும் என்னை உற்சாகப் படுத்து கின்றன ...

Romeoboy said...

பதிவு நல்லா இருக்கு இன்னும் கொஞ்சம் விரிவா எழுதுங்க. பதிவு ரொம்ப சின்னதா இருக்கு

மகா said...

//கொஞ்சம் விரிவா எழுதுங்க. //
அடுத்த பதிவுல இருந்த ஆரம்பிச்சுருவோம் ...மிக்க நன்றி ...